சொற்கப்பல் & சேலம் தக்கை அமைப்பு இணைந்து நிகழ்த்தும் மே மாத நாவல் விமர்சன அரங்குநவீன இலக்கிய சூழலில் பதிப்பக மைய அரசியலின் பிடிகளை தளர்த்தவும் , புதிய ஊற்றுகண்களை வளப்படுத்தவும், அடைப்புகளை சீர் செய்யவும், வாழ்வாங்குவாழ நவீன தமிழை முன்னெடுத்துசெல்வதற்குமாக ஆரம்பிக்கப்பட்ட சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பு கடந்த கூட்டங்களை சென்னையில் சிறப்பாக நடத்தியிருக்கிறது.
கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றின் மீதான விமர்சனக் கூட்டங்களை, விவாத அரங்குடன், கவிஞர் விக்ரமாதித்யன், கூத்துப்பட்டறை முத்துசாமி போன்ற மூத்த படைப்பாளிகளின் முன்னிலையில் சொற்கப்பல் நடத்தியுள்ளது.
சொற்கப்பல் விமர்சன தளத்தின் அடுத்த நிகழ்வாக அண்மைய நாவல்கள் குறித்த விமர்சனக் கூட்டம் சேலத்தில் நடைபெற உள்ளது.
நாள்- 08-05-2010 , சனிக்கிழ்மை ,
காலை 9:30 முதல் மாலை 5 வரை
இடம்: சேலம் மாநகரம்
சிவகாமி அம்மையார் மேல் நிலைப்பள்ளி,அம்மாபேட்டை ,சேலம்
தொடர்புக்கு தக்கை வீ.பாபு. 96009 53007,98651 53007
நிகழ்ச்சி நிரல் ;-காலை 9.30 க்கு
வரவேற்புரை: தக்கை வீபாபு
துவக்க உரை : ஈசன் இளங்கோ
தலைம உரை; சுப்ரபாரதி மணீயன்
முதல் அம்ர்வு காலை 10 முதல் 1 மணி வரைநாவல் விமர்சகர்1. தாண்டவராயன் கதை (பா.வெங்கடேசன்) , ஸ்ரீ நேசன்
2.நிலாவை வரைபவன் (கரிகாலன்0 , அசதா
3.சாந்தாமணியும் இன்ன ( வாமு.கோமு) , சாகிப்கிரான்
பிறகாதல்களும்
கருத்துரையாளர்கள் : தமிழ்நதி ,சந்திரா அய்யப்பாமதவன்
இரண்டாம் அமர்வு மதியம் 2 முதல் 5 வரைநாவல் விமர்சகர்
1.துருக்கி தொப்பி (கீரணூர் ஜாகீர் ராஜா) இளங்கோகிருஷ்ணன்
2.வெட்டுபுலி (தமிழ் மகன்) சிவராமன் (பைத்தியக்காரன்)
3.நெடுஞ்சாலை (கண்மணி குணசேகரன்) ச.முத்துவேல்
கருத்துரையாளர்கள்: தாராகணேசன், மோகனரங்கம்,காலபைரவன்
பங்கேற்பாளர்கள் ;அஜயன்பாலா, கண்டராதித்தன் ,தூரன் குணா ,வெய்யில்,இசை, பால் நிலவன் ,நீலகண்டன் ,உமா ச்க்தி, பாக்யம் சங்கர் ,பெரியசாமி ,அக்ச்சேரல்.பா.ராஜாமற்றும்
பலர்
நன்றியுரை: அமுதரசன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : அகநாழிகை வாசுதேவன் மற்றும் தக்கை பாபு
சொற்கப்பல் அமைப்பாளர்கள்
தமிழ்மகன்/ அகநாழிகை/தடாகம்.காம்/ டிஸ்கவரி புக் பேலஸ்
படிக்க சேலம்ஜில்லா செய்திகள் -
http://www.salemjilla.com/news/2010/05/ ... -in-salem/